irda லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
irda லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜூலை, 2014

LIC வளர்ச்சி அதிகாரிகளும் ஆயுள் காப்பீட்டு கழக முகவர்களும்

1956 ல் அப்போது புதிதாக இந்திய அரசை ஆண்ட ஆட்சியாளர்கள் அற்புதமான ஒரு முடிவெடுத்தார்கள்.
இன்சூரன்ஸ் துறை அப்போது தனியார் வசம் இருந்தது. மக்களின் சேமிப்பை சுரண்டும் பகாசூர நிறுவனங்களாகவே இருந்தது.
கோடிக்கணக்கில் பணம் புரண்ட அத்துறையை அரசு ஏற்று நடத்துவதன் மூலம்  இரண்டு முக்கிய லாபம்.
ஒன்று. மக்களின் பணம் பறி போவது தடுக்கப்படும்.
இரண்டு இந்தியாவுக்கு தேவைப்பட்ட பல கோடி மூலதனம் அந்த ஒரு துறையிலிருந்து அபரிமிதமாக பெற முடிந்தது.

256 கம்பெனிகள் தனியார் வசம் இருந்து அரசுடமையக்கப்பட்டது.

LIC of INDIA என்ற நிறுவனம் உதயமானது. இன்றைக்கு ஆலமரமாக இந்தியாவெங்கும் ஏன்  அயல்நாடுகளிலும் கிளை பரப்பி செயல்படும் இந்த நிறுவனதிற்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லை.

இந்த மாபெறும் வளர்ச்சிக்கு இன்று உரிமை கோர பலதரப்புண்டு.

மிக்க மகிழ்ச்சிதான்.

ஆனால் இத்தனை வெற்றிக்கு பின்பும் இந்த நிறுவனத்தில் களத்தில் பணிபுரியும் வளர்ச்சி அதிகாரிகளுக்கும் முகவர்களுக்கும் உரிய மரியாதை தரப்படுகிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக் குறிதான்.

2000 இல் தனியார் இத் துறையில் அனுமதிக்கப்படும் வரை இதனால் நிர்வாகதிற்க்கும் ஏனைய வகுப்பு ஊழியர்களுக்கும் ஒரு பிரச்சினையுமில்லை.
களப்பணியாளர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்றே போய்க்கொண்டு இருந்த்தது.

IRDA என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு LIC உட்பட எல்லா தனியார் நிறுவனங்களும் அதன் கீழ் கொண்டு வரப்பட்டது.

வெளிநாடுகளுக்கு அதிகாரிகள் சென்று பார்த்தார்கள். அங்கே  எதை எப்படி பார்த்தார்களோ. போனவர்கள் யாரோ. ஆனால் திரும்பி வந்த பிறகு அவர்கள் பார்வையில் இந்திய இன்ஸ்யூரன்ஸ் துறை மிக கேவலமாக தெரிந்தது. அதிலும் வளர்ச்சி அதிகாரிகள் இடைத்தரகர்களாக தெரிந்தார்கள். முகவர்கள் கல் தோன்றி புல்   தோன்றா  காலத்து அற்ப பதர்களாக தெரிந்தார்கள்.

வளர்ச்சி அதிகாரிகளின் ஊக்க ஊதியதிட்டம் ஊக்கமில்லாமல் வேலை செய்யும் விதமாக மாற்றியமைக்கப்பட்டது.
ஊக்கம் இழந்து பணியாற்றிய நிலையில் பணிப்பதுகாப்புக்கு ஆப்பு வைக்கப்படும் விதமாக SERVICE  CONDITION மாற்றியமைக்கப்பட்டது.
உச்ச கட்டமாக கணக்கில்லாத புதிய நியமனங்கள் நடந்தது.
படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் நல்ல வேலை என்று நம்பி வந்தார்கள். ஆனால் பணியில் சேர்ந்த பின் தான் புரிந்தது இங்கு கட்டப்பட்ட காலுடன் பரதம் ஆட வேண்டும், மூடப்பட்ட வாயுடன்தான் இனிமையாக பாட வேண்டுமென்று.
இன்றைக்கு சொல்ல முடியாத தோல்வி மனப்பான்மையுடன் பலர்  வெளி செல்ல யார் காரணம்.
வயது போனபின் எங்கு போய் வேலை தேடுவார்.
விளக்கம் சொல்ல ஆள் இல்லை.
புதியவர்கள் நிலை இது என்றால் சீனியர் நிலைமை இன்னும் மோசம். வாங்கும் சம்பளத்திற்கு தேவையான் பிரீமியம் சம்பாதிக்க வழி செய்யும்  முகவர்கள் தேர்வு கடினமாக்கப்பட்டது ஒரு புறம்.
பிரீமியத்திலும் -  வாங்கும் பிரீமியம் முழுதும் கணக்கில் கொள்ளாமல் பட்டியலிடப்படும் கொடூரம் மறுபுறம்.
உச்ச கட்ட கேவலம் ஜனவரி மாதத்திலிருந்து இன்று ஜூலை கடைசிவரை பத்து எண்ணிக்கைக்குள் பாலிசிகள்.

 இன்ஸ்யுரன்ஸ் துறை சீரமைப்பில் முகவர் தேர்வு முறையும் பணியமர்த்தலும் மிக கடுமையாக்கப்பட்டது. மெத்த படித்து பட்டம் பல படித்தவர் மண்ணை  கவ்வினார்கள். படித்து பாஸ் ஆனவர்கள் இந்த வேலையே வேண்டாம் என்று ஓடியவர்கள் அதிகமானார்கள். கடுமையான குறைந்த பட்ச வணிக உயர்வு  நிபந்தனைகளால் லட்ச்சக்கணக்கில் பழைய முகவர் வெளியேற்றம்.

சரி... IRDA  செய்தது சரிதான்.. முகவர்கள் தான் இன்சூரன்ஸ் துறையின் முதுகெலும்பு. அவ்ர்களின் நியமன முறை கடுமையாக்கப்பட்டது சரிதான். முகவர் வேலை சூப்பர் வேலை... என்று சொல்லும் மேதாவிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.

1. நீங்கள் ஒரு இன்ஸ்யூரன்ஸ் முகவராக விரும்புவீர்களா ? (பாஸ் பண்ணுவதும் வெற்றியடைவதும் வேறு)
2. உங்கள் மகன்/மகள் ஒரு இன்ஸ்யூரன்ஸ் முகவராக விரும்புவீர்களா?
3. LIC ல் பணியாற்றும் எந்த நிலை அலுவலர்/ஊழியர் தனது மகன் / மகள் ஏஜெண்ட் ஆவதற்கு உளப்பூர்வமாக விருப்பம் உண்டா?. இனியாவது அதற்கு முயற்ச்சிப்பார்களா?
4.வேறு அரசுத்துறை பணியாளர்கள் இந்த வேலையில் தனது வாரிசுகளை சேர்க்க விரும்புவார்களா?
5. எந்த ஒரு படிக்கும் மாணவனோ இந்த வேலையை ஒரு கனவு வேலையாக கொண்டிருக்கிறார்களா?

அப்படியானால்...

முகவர் தொழில் என்பது என்ன?

யார் இந்த தொழிலை செய்ய தகுதியானவர்கள்?

உண்மையிலேயே இந்த தொழிலின் மகத்துவம்தான் என்ன?

ஆனால் ஒவ்வொரு ஊரிலும் பல முகவர்கள் கதா நாயகர்களாக சாதிக்கும் மனிதர்களாக திரிகிறார்களே - அது எப்படி?

இவைதான் LIC  நிர்வாகத்தால் இன்றுவரை கண்டு கொள்ள முடியாத ரகசியம்.

தெரிந்து கொண்ட வளர்ச்சி அதிகாரிகள் சமூகம் இன்று வரை அழிக்கப்படாமல் நிமிர்ந்து நிற்க்கும் அதிசயம்.

பங்கு மார்க்கெட் பாலிசிகளின் அழிவு. அதி பாதாள போனஸ் சரிவு.. முகவர் தேர்வு கடினப்படுத்துதல் போதிய  புதிய பாலிசிகள் இல்லாமை . இவையெல்லாம் ஒரு புறம்..... இடைத்தரகர்களை நீக்குகிறீம் என்று ஒரு புறம் அறைகூவலுடன்.... FSE DSE CORPORATE AGENT BROKER.... என்று வித வித மான நவீன CHANNEL கள் முகவர்களை முட்டாளாக்கும் CLIA திட்டம்.

இதுபோன்ற எதிர்ப்புகளையும் மீறி LIC  என்ற நிறுவனம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்னும் ஒற்றை சிந்தனையோடு ஒவ்வொரு வளர்ச்சி அதிகாரியும் இன்று,  இருக்கும் முகவர்களை செழுமைப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

முகவர்களாக இன்றைய தினம் உயர்ந்து நிற்போர் முதலில் வைரங்களே ஆனால் பட்டை தீட்டப்படாதவை. இன்றைய ஜொலிப்பு வளர்ச்சி அதிகாரியின் கைவண்ணம்.

நானும் தீட்டுகிறேன் பேர்வழி என்று நிர்வாகம் கையிலெடுத்த எத்தனை  முகவர்கள் சீரழிந்து போயினர் என்பது சரித்திரம்.