ஞாயிறு, 30 அக்டோபர், 2011

சனி, 15 அக்டோபர், 2011




திருநெல்வேலி கோட்ட புதிய பொறுப்பாளர்கள் முதல் நிர்வாக சந்திப்புக்காக கோட்ட அலுவலகம் சென்றிருந்தபோது கோட்ட இன்சுரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் வாழ்த்துகளுடன் பரிசாக நல்ல புத்தகங்களையும் வழங்கி மகிழ்ந்தனர். தோழர் முத்து குமாரசாமியுடன் தோழர்கள் ஜே.கார்த்திக் ராஜா(மண்டல தலைவர்) புதிய தலைவர். சுகுமார், புதிய கோட்ட பொது செயலாளர் கே.பிரசாத், மாறும் இணை செயலாளர்கள் செல்லசாமி , ரவி .... தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக.... தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக..  

வியாழன், 29 செப்டம்பர், 2011

Zonal Council at Pondichery

வேலூர் கோட்டம் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தென்னிந்திய மண்டல மாநாடு.
                                 
                                   பாண்டிச்சேரியில் கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் நடந்த மாநாடு மாபெரும் வெற்றி. தோழர் ஆனந்த் இம்முறையும் அமோக வாக்கு வித்தியாசத்தில் மண்டல செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருப்பது சங்கத்துக்கு பலம் சேர்க்கும்.
                                திருநெல்வேலி கோட்ட பொது செயலாளர் தோழர் ஜே.கார்த்திக் ராஜா மண்டல தலைவராக தேர்வு செய்யப்பட்டு ஒரு புதிய தலைமைக்கு சங்கத்தை அழைத்து செல்ல இருக்கிறார். தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் போட்டியிடாததால் மதுரை முன்னாள் தலைவர். தோழர் மரியா வில்லியம் துணை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
                                மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய புதுவை முதல்வர் மாண்புமிகு ரெங்கசாமி மிக எளிமையாக பேசினார். டாக்டர் ராமதாஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர் சிறப்பான அறிவுரைகளுடன் தற்போதைய பொருளாதார விஷயங்கள் குறித்து பேசினார்.
                               49 க்கும் அதிகமான தோழர்கள் பொது விவாதத்தில் கலந்து கொண்டனர். பொது விவாதத்தில் பேச அனுமதி கேட்ட தஞ்சை கோட்ட பொதுசெயலாளர் தோழர் மூர்த்தி யின் கோரிக்கை மறுக்கப்பட்டது. அதற்காக மேடை முன் சென்று சர்ச்சை ஏற்படுத்தியிருக்க வேண்டாம்.
                              சங்க சரித்திரத்தில் தாக்கம் ஏற்படுத்திய முன்னாள் தலைவர்கள் இம்முறையும் பேச அனுமதிக்கப்பட்ட போது தற்கால நடைமுறைகள் தெரியாமல் பேசி தர்ம சங்கடபடுத்தியது இன்னும் தொடர்ந்ததது. இதற்கு அகில இந்திய தலைவர் தோழர் நாகேஷ் பதில் கூறியது இன்னும் அசிங்கம். அகில இந்திய பொதுசெயலாளர் போல பதில் கூற இன்னும் இவர்கள் பல கல் தொலைவு செல்ல வேண்டும்.
                             
                             முதல் நாள் இரவு பாடல் நிகழ்ச்சி நல்ல ஆடல் நிகழ்சியாகியது. ஆவேசமான போராட்டங்கள் இல்லாததால் அடக்கி வைத்த ஆவேசத்தை தணிக்க நல்ல ஒரு நிகழ்ச்சிதான்.

                             இன்னும் இரண்டு வருடம் புதிய பாதைகள் உருவாக வாழ்த்துக்கள்.

                                தங்கும் இடம் சாப்பாடு எல்லாம் நன்றாக இருந்தது. 

புதன், 20 ஜூலை, 2011

தோழர் மீனாட்சி சுந்தரம்.......!!!!

தோழர் மீனாட்சி சுந்தரம்.......!!!!


மிகவும் நல்ல ஒரு நண்பர்.

களப்பணியாளர் கூட்டமைப்புக்கு பல நிலைகளில் ஒத்துழைப்பு 

கொடுப்பவர்.. தலைமையேற்று நடத்துபவர்.

.நண்பர்களை மகிழ்விக்க சுய கொவ்ரவம் பார்க்காதவர்.

இப்படி பல பரிணாமங்களில் பார்த்திருக்கிறேன். 

அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நானும் கேட்டதில்லை.. அவர் கூட 

யாரிடமும் கூறி வேறு நபர்கள் வழி கேள்விப்பட்டதுமில்லை. 

எவ்வளவு பெரிய சோகத்தை உள்ளடக்கி ஒரு பொது வாழ்க்கையை 

நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அறிந்த போது அதிர்ந்து போனேன். 

பல மரணங்கள் ... சில என்னை பாதித்து இருக்கிறது. சில என்னை 

பக்குவமடைய செய்திருக்கிறது. சில மரணங்கள் என்னை எச்சரிக்கிறது.

ஆனால் இவரது மகனின் வாழ்வும் ஒன்றல்ல இரண்டு மகன்களையும் 

எட்டு வயது ஆரம்பித்து பதினாறு வயதுவரை உச்சக்கட்ட மருத்துவம் 

செய்தும் ஒரே நோய்க்கு காவு கொடுப்பது ஒருவருக்கல்ல அவரது 

குடும்பத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரும் சோகம்..

கம்ப்யுட்டரில் உலாவி உலக விசயங்களை தந்தைக்கு சொல்லி உடல் 

மட்டும் ஒத்துழைக்கா கொடிய ஒரு நோயுடன் மருத்துவமனைக்கும் 

வீட்டுக்குமாய் அவரது அலைச்சல்களுக்கிடையில் மதுரை கோட்ட 

பொது செயலாளர் ஆகவும் 

அதுவும் அவரது காலத்தில் சங்கத்துக்காக ஒரு சொந்த கட்டிடத்தை 

மதுரையில் அமைப்பதும்...

டெல்லி மும்பை போராட்டங்களுக்கு தோழர்களை தயார்படுத்தி 

அழைத்து சென்றதும்..

இன்னும் சென்னை மண்டலத்தின் உதவிதலைவராக நீடிப்பதும்.... 

கற்பனை செய்ய முடியவில்லை. 

குடும்பம் முழுவதுமே ஏற்றுகொண்ட மா பெரும் தியாகமாகவே 

கருதுகிறேன்.

இயற்கை ஏன் தோழருக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் இத்தனை 

வஞ்சனை செய்ததோ. 

இத்தோடு அவர்களுக்கு ஆறுதலும் உற்சாகமும் தரட்டும். 

தோழருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் உணர்ச்சிபூர்வமான இயக்க 

வணக்கங்களும் வாழ்த்துக்களும்.......

--