புதன், 20 ஜூலை, 2011

தோழர் மீனாட்சி சுந்தரம்.......!!!!

தோழர் மீனாட்சி சுந்தரம்.......!!!!


மிகவும் நல்ல ஒரு நண்பர்.

களப்பணியாளர் கூட்டமைப்புக்கு பல நிலைகளில் ஒத்துழைப்பு 

கொடுப்பவர்.. தலைமையேற்று நடத்துபவர்.

.நண்பர்களை மகிழ்விக்க சுய கொவ்ரவம் பார்க்காதவர்.

இப்படி பல பரிணாமங்களில் பார்த்திருக்கிறேன். 

அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நானும் கேட்டதில்லை.. அவர் கூட 

யாரிடமும் கூறி வேறு நபர்கள் வழி கேள்விப்பட்டதுமில்லை. 

எவ்வளவு பெரிய சோகத்தை உள்ளடக்கி ஒரு பொது வாழ்க்கையை 

நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அறிந்த போது அதிர்ந்து போனேன். 

பல மரணங்கள் ... சில என்னை பாதித்து இருக்கிறது. சில என்னை 

பக்குவமடைய செய்திருக்கிறது. சில மரணங்கள் என்னை எச்சரிக்கிறது.

ஆனால் இவரது மகனின் வாழ்வும் ஒன்றல்ல இரண்டு மகன்களையும் 

எட்டு வயது ஆரம்பித்து பதினாறு வயதுவரை உச்சக்கட்ட மருத்துவம் 

செய்தும் ஒரே நோய்க்கு காவு கொடுப்பது ஒருவருக்கல்ல அவரது 

குடும்பத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரும் சோகம்..

கம்ப்யுட்டரில் உலாவி உலக விசயங்களை தந்தைக்கு சொல்லி உடல் 

மட்டும் ஒத்துழைக்கா கொடிய ஒரு நோயுடன் மருத்துவமனைக்கும் 

வீட்டுக்குமாய் அவரது அலைச்சல்களுக்கிடையில் மதுரை கோட்ட 

பொது செயலாளர் ஆகவும் 

அதுவும் அவரது காலத்தில் சங்கத்துக்காக ஒரு சொந்த கட்டிடத்தை 

மதுரையில் அமைப்பதும்...

டெல்லி மும்பை போராட்டங்களுக்கு தோழர்களை தயார்படுத்தி 

அழைத்து சென்றதும்..

இன்னும் சென்னை மண்டலத்தின் உதவிதலைவராக நீடிப்பதும்.... 

கற்பனை செய்ய முடியவில்லை. 

குடும்பம் முழுவதுமே ஏற்றுகொண்ட மா பெரும் தியாகமாகவே 

கருதுகிறேன்.

இயற்கை ஏன் தோழருக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் இத்தனை 

வஞ்சனை செய்ததோ. 

இத்தோடு அவர்களுக்கு ஆறுதலும் உற்சாகமும் தரட்டும். 

தோழருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் உணர்ச்சிபூர்வமான இயக்க 

வணக்கங்களும் வாழ்த்துக்களும்.......

-- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக