செவ்வாய், 20 ஜனவரி, 2015

NFIFWI - An Unique organisation for Development Officers of LIC of India

NATIONAL FEDERATION OF INSURANCE FIELD WORKERS OF INDIA

I am very proud to be a member of, the Only one organisation, fighting for the betterment of the
Clss II officers the Development Officers in LIC of India.

There are so many Reasons.

after the first reason that is Only One... there are some others too..

the Leader who organised it  and molded to a great shape that is fit for the whole nation which includes different language religion cast and geographical designs.

He is S.W.Kalwit....

He is living in the hearts of every genuine members of this organisation.

he lost his JOB and rejected management's ruthless lenity.

he may lost HIS LIFE only due to the inability to live without the organisation. (or seeing the new dimension of the successors).

His forethought proved right.

therefore the organisation survives.

The culture of the organisation. the next quality which deserves the next importance.

there are elections and change in leadership.....

so far no big differences between leaders that lead to collapse.....

becoz the management which always tries hard to collapse the organisation.

but the future no body can assure becoz things goes different......

செவ்வாய், 29 ஜூலை, 2014

LIC வளர்ச்சி அதிகாரிகளும் ஆயுள் காப்பீட்டு கழக முகவர்களும்

1956 ல் அப்போது புதிதாக இந்திய அரசை ஆண்ட ஆட்சியாளர்கள் அற்புதமான ஒரு முடிவெடுத்தார்கள்.
இன்சூரன்ஸ் துறை அப்போது தனியார் வசம் இருந்தது. மக்களின் சேமிப்பை சுரண்டும் பகாசூர நிறுவனங்களாகவே இருந்தது.
கோடிக்கணக்கில் பணம் புரண்ட அத்துறையை அரசு ஏற்று நடத்துவதன் மூலம்  இரண்டு முக்கிய லாபம்.
ஒன்று. மக்களின் பணம் பறி போவது தடுக்கப்படும்.
இரண்டு இந்தியாவுக்கு தேவைப்பட்ட பல கோடி மூலதனம் அந்த ஒரு துறையிலிருந்து அபரிமிதமாக பெற முடிந்தது.

256 கம்பெனிகள் தனியார் வசம் இருந்து அரசுடமையக்கப்பட்டது.

LIC of INDIA என்ற நிறுவனம் உதயமானது. இன்றைக்கு ஆலமரமாக இந்தியாவெங்கும் ஏன்  அயல்நாடுகளிலும் கிளை பரப்பி செயல்படும் இந்த நிறுவனதிற்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லை.

இந்த மாபெறும் வளர்ச்சிக்கு இன்று உரிமை கோர பலதரப்புண்டு.

மிக்க மகிழ்ச்சிதான்.

ஆனால் இத்தனை வெற்றிக்கு பின்பும் இந்த நிறுவனத்தில் களத்தில் பணிபுரியும் வளர்ச்சி அதிகாரிகளுக்கும் முகவர்களுக்கும் உரிய மரியாதை தரப்படுகிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக் குறிதான்.

2000 இல் தனியார் இத் துறையில் அனுமதிக்கப்படும் வரை இதனால் நிர்வாகதிற்க்கும் ஏனைய வகுப்பு ஊழியர்களுக்கும் ஒரு பிரச்சினையுமில்லை.
களப்பணியாளர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்றே போய்க்கொண்டு இருந்த்தது.

IRDA என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு LIC உட்பட எல்லா தனியார் நிறுவனங்களும் அதன் கீழ் கொண்டு வரப்பட்டது.

வெளிநாடுகளுக்கு அதிகாரிகள் சென்று பார்த்தார்கள். அங்கே  எதை எப்படி பார்த்தார்களோ. போனவர்கள் யாரோ. ஆனால் திரும்பி வந்த பிறகு அவர்கள் பார்வையில் இந்திய இன்ஸ்யூரன்ஸ் துறை மிக கேவலமாக தெரிந்தது. அதிலும் வளர்ச்சி அதிகாரிகள் இடைத்தரகர்களாக தெரிந்தார்கள். முகவர்கள் கல் தோன்றி புல்   தோன்றா  காலத்து அற்ப பதர்களாக தெரிந்தார்கள்.

வளர்ச்சி அதிகாரிகளின் ஊக்க ஊதியதிட்டம் ஊக்கமில்லாமல் வேலை செய்யும் விதமாக மாற்றியமைக்கப்பட்டது.
ஊக்கம் இழந்து பணியாற்றிய நிலையில் பணிப்பதுகாப்புக்கு ஆப்பு வைக்கப்படும் விதமாக SERVICE  CONDITION மாற்றியமைக்கப்பட்டது.
உச்ச கட்டமாக கணக்கில்லாத புதிய நியமனங்கள் நடந்தது.
படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் நல்ல வேலை என்று நம்பி வந்தார்கள். ஆனால் பணியில் சேர்ந்த பின் தான் புரிந்தது இங்கு கட்டப்பட்ட காலுடன் பரதம் ஆட வேண்டும், மூடப்பட்ட வாயுடன்தான் இனிமையாக பாட வேண்டுமென்று.
இன்றைக்கு சொல்ல முடியாத தோல்வி மனப்பான்மையுடன் பலர்  வெளி செல்ல யார் காரணம்.
வயது போனபின் எங்கு போய் வேலை தேடுவார்.
விளக்கம் சொல்ல ஆள் இல்லை.
புதியவர்கள் நிலை இது என்றால் சீனியர் நிலைமை இன்னும் மோசம். வாங்கும் சம்பளத்திற்கு தேவையான் பிரீமியம் சம்பாதிக்க வழி செய்யும்  முகவர்கள் தேர்வு கடினமாக்கப்பட்டது ஒரு புறம்.
பிரீமியத்திலும் -  வாங்கும் பிரீமியம் முழுதும் கணக்கில் கொள்ளாமல் பட்டியலிடப்படும் கொடூரம் மறுபுறம்.
உச்ச கட்ட கேவலம் ஜனவரி மாதத்திலிருந்து இன்று ஜூலை கடைசிவரை பத்து எண்ணிக்கைக்குள் பாலிசிகள்.

 இன்ஸ்யுரன்ஸ் துறை சீரமைப்பில் முகவர் தேர்வு முறையும் பணியமர்த்தலும் மிக கடுமையாக்கப்பட்டது. மெத்த படித்து பட்டம் பல படித்தவர் மண்ணை  கவ்வினார்கள். படித்து பாஸ் ஆனவர்கள் இந்த வேலையே வேண்டாம் என்று ஓடியவர்கள் அதிகமானார்கள். கடுமையான குறைந்த பட்ச வணிக உயர்வு  நிபந்தனைகளால் லட்ச்சக்கணக்கில் பழைய முகவர் வெளியேற்றம்.

சரி... IRDA  செய்தது சரிதான்.. முகவர்கள் தான் இன்சூரன்ஸ் துறையின் முதுகெலும்பு. அவ்ர்களின் நியமன முறை கடுமையாக்கப்பட்டது சரிதான். முகவர் வேலை சூப்பர் வேலை... என்று சொல்லும் மேதாவிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.

1. நீங்கள் ஒரு இன்ஸ்யூரன்ஸ் முகவராக விரும்புவீர்களா ? (பாஸ் பண்ணுவதும் வெற்றியடைவதும் வேறு)
2. உங்கள் மகன்/மகள் ஒரு இன்ஸ்யூரன்ஸ் முகவராக விரும்புவீர்களா?
3. LIC ல் பணியாற்றும் எந்த நிலை அலுவலர்/ஊழியர் தனது மகன் / மகள் ஏஜெண்ட் ஆவதற்கு உளப்பூர்வமாக விருப்பம் உண்டா?. இனியாவது அதற்கு முயற்ச்சிப்பார்களா?
4.வேறு அரசுத்துறை பணியாளர்கள் இந்த வேலையில் தனது வாரிசுகளை சேர்க்க விரும்புவார்களா?
5. எந்த ஒரு படிக்கும் மாணவனோ இந்த வேலையை ஒரு கனவு வேலையாக கொண்டிருக்கிறார்களா?

அப்படியானால்...

முகவர் தொழில் என்பது என்ன?

யார் இந்த தொழிலை செய்ய தகுதியானவர்கள்?

உண்மையிலேயே இந்த தொழிலின் மகத்துவம்தான் என்ன?

ஆனால் ஒவ்வொரு ஊரிலும் பல முகவர்கள் கதா நாயகர்களாக சாதிக்கும் மனிதர்களாக திரிகிறார்களே - அது எப்படி?

இவைதான் LIC  நிர்வாகத்தால் இன்றுவரை கண்டு கொள்ள முடியாத ரகசியம்.

தெரிந்து கொண்ட வளர்ச்சி அதிகாரிகள் சமூகம் இன்று வரை அழிக்கப்படாமல் நிமிர்ந்து நிற்க்கும் அதிசயம்.

பங்கு மார்க்கெட் பாலிசிகளின் அழிவு. அதி பாதாள போனஸ் சரிவு.. முகவர் தேர்வு கடினப்படுத்துதல் போதிய  புதிய பாலிசிகள் இல்லாமை . இவையெல்லாம் ஒரு புறம்..... இடைத்தரகர்களை நீக்குகிறீம் என்று ஒரு புறம் அறைகூவலுடன்.... FSE DSE CORPORATE AGENT BROKER.... என்று வித வித மான நவீன CHANNEL கள் முகவர்களை முட்டாளாக்கும் CLIA திட்டம்.

இதுபோன்ற எதிர்ப்புகளையும் மீறி LIC  என்ற நிறுவனம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்னும் ஒற்றை சிந்தனையோடு ஒவ்வொரு வளர்ச்சி அதிகாரியும் இன்று,  இருக்கும் முகவர்களை செழுமைப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

முகவர்களாக இன்றைய தினம் உயர்ந்து நிற்போர் முதலில் வைரங்களே ஆனால் பட்டை தீட்டப்படாதவை. இன்றைய ஜொலிப்பு வளர்ச்சி அதிகாரியின் கைவண்ணம்.

நானும் தீட்டுகிறேன் பேர்வழி என்று நிர்வாகம் கையிலெடுத்த எத்தனை  முகவர்கள் சீரழிந்து போயினர் என்பது சரித்திரம்.


செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஏனாம் பகுதி கூலி உயர்வு போராட்டம் – வன்முறை – கொலை


ஏனாம் பகுதி கூலி உயர்வு போராட்டம் – வன்முறை – கொலை
ஏனாம் பகுதி புதுசேரி யூனியன் பிரதேசத்தின் ஆந்திராவை ஒட்டிய ஒரு தொகுதி. வரி சலுகைகளுக்காக அனேக பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் யூனியன் பிரதேசங்களில் தமது தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. இந்த வகையில் ரீஜென்சி டைல்ஸ் என்ற நிறுவனம் திரு. ஜி.என்.நாயுடு என்பவரால் 1983 ல் ஆரம்பிக்கப்பட்டு நல்ல முறையில் இன்னும் பல எஞ்சினியரிங் கல்வி நிறுவனங்களுடன் நடைபெற்று வருகிறது. ஆனாலும் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனம் ரூபாய் 10 மதிப்பில் வெளியிடப்பட்ட முகமதிப்பிலிருந்து சரிவடைந்து தற்போது ரூ4.25 என்ற அளவிலேயே உள்ளது.
எல்லா நிறுவனங்களும் கூப்பாடு போடும் அதே கூலி உயர்வு பிரச்சினை இந்த நிறுவனத்திலும் ஆரம்பமாகியது. தொழிற்சங்கங்களுடன் நடத்திய பல சுற்று பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்து வேலை நிறுத்த போராட்டம் மறியல் போராட்டம் என்று வளர்ச்சி பெற்றது. நிர்வாகங்களுக்கு அடுத்த கட்ட போக்கிடம் காவல் துறைதான். அதிலும் தனியார் துறை என்றால் காவல் துறை கூட தனிகவனம் செலுத்துவது இயல்பாகி போயிருக்கிறது. மறியல் செய்தவர்களை காவல் நிலையத்துக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்ற காவல் துறையால் பக்குவமான அணுகுமுறை தவறியதால் ஏற்பட்ட குழப்பம் தொழிற் சங்க தலைவரின் அகால மரணத்திற்கு வழி வகுத்திருக்கிறது. தலைவரின் உயிர் பறிக்கப்பட்ட  சம்பவம் ஏற்கனவே கொதிப்பில் இருந்த தொழிலாளர் மற்றும் தலத்திலுள்ள சமுதாய மக்களிடையே மேலும் வெறி ஏற்றியது. விளைவு, தங்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை சின்னா பின்னமாகியது. தொழிற்சாலையை கவனித்து வந்த, நிறுவனரின் குடும்ப உறுப்பினராகிய அதன் தலைவரும், கலவரகாரர்களால் அராஜகமான முறையில் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். தொழிற்சங்க வரலாற்றில் மிகவும் துக்ககரமான நாளாக கருதவேண்டிய பதிவுகளை உள்ளடக்கிய நாளாக கழிந்து போய் விட்டது. அரசாங்கத்தை பொருத்த அளவிலும் சரி தனியார் துறையானாலும் கொத்தனார், பிளம்பர் போன்ற தொழிலாளர்களாகட்டும் இன்றைய தினம் சம்பள உயர்வு என்பது ஒரு இமாலய பிரச்சினையாகவே கையாளப்படுகிறது. சம்பள உயர்வு கேட்பது கூட கெட்ட ஒரு செயலாகவே கையாளப்படுகிறது. பல சுற்று பேச்சு வார்த்தைகளும் போராட்டங்களும் வேலையிழப்புகளும் பழிவாங்கும் படலமும் பல நிறுவனங்களின் தொடர் கதையாகிப் போய் விட்டது. முதலாளிகளின் தறுதலை போக்கும் ஊதாரி முடிவுகளும், அரசாங்க கொள்கை முடிவுகளால் தடுமாறும் அரசு நிறுவனங்களும் தமது எத்தகைய போக்கையும் மாற்ற முயற்ச்சிக்காமல் முதலில் கை வைப்பது ஆட் குறைப்பும், கூலி உயர்வை மறுப்பதும் ஆகும்.
எல்லா நிறுவனங்களுக்கும் தகுதியான நல்ல கல்வியில் திறம் பெற்ற ஊழியர்கள் வேண்டும். ஆனால் அவர் வேலையில் சேர்ந்த்ததும் முழு உழைப்பையும் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டுமே வழங்க முடியும். சமூக பொருளாதார காரணிகள் ஏற்படுத்தும் குடும்ப நெருக்கடிகளுக்கு அவரது சம்பளத்துக்கு உள்ளாகவே தீர்வு காண வேண்டும். எல்லாவற்றிலுல் மேலாக தனது அடுத்த தலைமுறையை சிறந்த முறையில் உருவாக்க வேண்டிய நிர்பந்தம். எந்த கணத்திலும் வேலையிழப்பை சந்த்தித்தாலும் அடுத்த கட்டத்திற்கு தயாராக முடியாத நிலை. இன்றைய அரசு தனது கொள்கைகளால் ஒரு புறம் ஓய்வு ஊதியம் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளதென்றால் ஊடகங்களும் சமூகமும் அளவுக்கு அதிகமும் பன்னாட்டு நாகரீகத்தையும் பின்பற்றும் சமூக உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம் இன்று அதிக விலை, ஆரம்ப கல்வி தொட்டு அனைத்தும் எட்டா உயரத்தில். இதில் சம்பளம் அல்லது கூலி வாங்குவோர் நிலை ஒன்றும் சொர்க்க புரியல்ல. மூலதனம் உழைப்பு என்ற மிகப்பெரிய காரணியால் தான் பலுகி பெறுக முடிகிறது. அதில் உழைப்பவரை புறந்தள்ளி மூலதன குவிப்பு நடைபெறுமானால் அதன் விழைவு ரீஜென்சி டைல்ஸ் நிறுவனம் சந்தித்ததாகவே இருக்கும். ஆனால் இது மிக மோசமானது.
இதனால் பாதிக்கப்படுவது இரு தரப்பு மட்டுமல்ல, தேசத்தின் முகவரியும் கூட. இன்னும் கெட்டுவிடவில்லை. இது அபாயத்தின் முதல் மணியாக கொள்வோம். போலியான வாழ்க்கை முறைகளை கற்று கொடுக்கும் ஊடகங்கள் தங்கள் பங்களிப்பில் ஜாக்கிரதையாக இருக்கட்டும். அரசு கல்வியையும், மருத்துவத்தையும், எளிதாக எல்லோரும் பெற்றுக்கொள்ள வழி செய்ய வேண்டும். பாதுகாப்பான ஓய்வு காலம் எல்லோரும் பெற திட்டம் வேண்டும். அன்றாடம் உயரும் எல்லா விலைவாசிகளும் கட்டுப் படுத்த பட வேண்டும். பணம் ஒன்றே பிரதானம் என்ற எண்ணம் பிறப்பு முதல் இறப்பு வரை இருக்கும் நிலையை மாற்றினால் மட்டுமே கூலி உயர்வு என்ற பிரச்சினைக்கு நிர்வாகமும் அதற்கு இசைவாக நடக்கும் அரசும் தீர்வு காண முடியும். இல்லையென்றால் இப்போது இருக்கும் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் அன்னிய நாடுகள் தற்போது சந்திக்கும் மக்கள் புரட்சி இந்தியாவிலும் ஏற்பட அதிக தூரமில்லை. அதனால் ஏற்படும் விளைவுகள் அனைவரும் மகிழதக்கதாக இருக்காது என்பதே உண்மை. நாகரீகம் என்பது உணர்வு கலாசாரமில்லை. சமாதானமான உணர்வு பூர்வமான உறவுகளை உள்ளடக்கி அவரவர் பூர்விக வாழ்வில் மகிழ்ந்து கொண்டாடுவதாக இருக்கட்டும்.     

வியாழன், 22 டிசம்பர், 2011

com . J.Karthick Raja Addressing


Dharna meeting organised by AIIEA tirunelveli division and NF participation in full.... at Tirunelveli against FDI increase and Privatisation of LIC

memorandum submitted to Hon'ble MP Ramasubbu

com president P.Sugumar and General Secretary K.Prasad submitting the Memorandum By NFIFWI against privatisation and FDI increase in Insurance sector.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

Dharna on 10th december 2011


திருநெல்வேலி கோட்ட இன்ஸ்யுரன்ஸ் ஊழியர் சங்கம் முன்னெடுத்த இன்சுரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்த தர்ணா போராட்டத்தில் தேசிய களப்பணியாளர் கூட்டமைப்பு கலந்து கொண்டு தர்ணா மாபெரும் வெற்றி பெற செய்தது.

dharna on 10th december 2011

திருநெல்வேலி கோட்ட இன்ஸ்யுரன்ஸ் ஊழியர் சங்கம் முன்னெடுத்த இன்சுரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்த தர்ணா போராட்டத்தில் தேசிய களப்பணியாளர் கூட்டமைப்பு கலந்து கொண்டு தர்ணா மாபெரும் வெற்றி பெற செய்தது. தென் மண்டல தலைவர் கார்த்திக் ராஜா உரையாற்றுகிறார்.