மரணம் தவம்....................?
நீ ரசித்ததை கொண்டே ஆறுதல் சொல்கிறேன். பல தவங்களின் முடிவு மனதை ஊடுருவுகிறது. நானும் அனுபவித்துள்ளேன்.
மரணம்.......
எல்லோருக்கும்
எழுதப்பட்ட சாசனம் !
உனக்கு மட்டும்
இல்லையென்று
எண்ணுவது நூதனம் !
மரணம் இரசி!
மரணித்தல் சுகம் !
சுகிக்காதவர்க்கு யுகம் !
மரணம் புசி!
வாழ்க்கை பந்தயம்
வெறும் மரணம் நோக்கித்தான்
என்பதுணர்!
மரணம் ஒரு தியானம் !
மரணம் ஒரு ஞானம் !
எல்லை மரணம் என்பதால்
இலக்கை காதலி !
உலக உருண்டை
உண்மையில் மரணத்தின்
திசையில் தானே
உருள்கிறது!
நிர்மூலமாவது
மெய்யென்றால்
மெய்யை பொய்யாக்கு !
மறுமுறை
உன் உடல் கதவை
உயிர் தட்டும்போது
மருத்துவரை அழைக்காதே
மரணத்தை அழை !
உடல் வேலி
உறுதியாய் இருந்தாலும்
இயற்கை
உயிர் உடைத்து
அழுகச் செய்யும் !
இன்னும் இருப்பவர்களை
அழச் செய்யும் !
உடலைப் புதுப்பிப்பதாய்
உள்ளோர் உளறிக் கொட்டினாலும்
அஸ்தி தான் அஸ்தம் ! அறி !
உடல் சுகிக்காத
உணர்வை
உயிர் சுகிக்கட்டும் !
மரணி !
பிரபஞ்சம்
உனக்குள் அடங்கும் !
தம்பி முத்துகுமரா இதற்குள் அமைதி அடைந்திருப்பாய்... ஆனாலும் அவ்வப்போது வந்து போவதை தடுக்கமுடியாது.
நன்றி! நண்பா! உன் கரங்கள் எனக்கு எப்போதும் கண்ணீர் துடைக்கும் ஆறுதல்கள் !
பதிலளிநீக்கு