புதன், 20 ஜூலை, 2011

தோழர் மீனாட்சி சுந்தரம்.......!!!!

தோழர் மீனாட்சி சுந்தரம்.......!!!!


மிகவும் நல்ல ஒரு நண்பர்.

களப்பணியாளர் கூட்டமைப்புக்கு பல நிலைகளில் ஒத்துழைப்பு 

கொடுப்பவர்.. தலைமையேற்று நடத்துபவர்.

.நண்பர்களை மகிழ்விக்க சுய கொவ்ரவம் பார்க்காதவர்.

இப்படி பல பரிணாமங்களில் பார்த்திருக்கிறேன். 

அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நானும் கேட்டதில்லை.. அவர் கூட 

யாரிடமும் கூறி வேறு நபர்கள் வழி கேள்விப்பட்டதுமில்லை. 

எவ்வளவு பெரிய சோகத்தை உள்ளடக்கி ஒரு பொது வாழ்க்கையை 

நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அறிந்த போது அதிர்ந்து போனேன். 

பல மரணங்கள் ... சில என்னை பாதித்து இருக்கிறது. சில என்னை 

பக்குவமடைய செய்திருக்கிறது. சில மரணங்கள் என்னை எச்சரிக்கிறது.

ஆனால் இவரது மகனின் வாழ்வும் ஒன்றல்ல இரண்டு மகன்களையும் 

எட்டு வயது ஆரம்பித்து பதினாறு வயதுவரை உச்சக்கட்ட மருத்துவம் 

செய்தும் ஒரே நோய்க்கு காவு கொடுப்பது ஒருவருக்கல்ல அவரது 

குடும்பத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரும் சோகம்..

கம்ப்யுட்டரில் உலாவி உலக விசயங்களை தந்தைக்கு சொல்லி உடல் 

மட்டும் ஒத்துழைக்கா கொடிய ஒரு நோயுடன் மருத்துவமனைக்கும் 

வீட்டுக்குமாய் அவரது அலைச்சல்களுக்கிடையில் மதுரை கோட்ட 

பொது செயலாளர் ஆகவும் 

அதுவும் அவரது காலத்தில் சங்கத்துக்காக ஒரு சொந்த கட்டிடத்தை 

மதுரையில் அமைப்பதும்...

டெல்லி மும்பை போராட்டங்களுக்கு தோழர்களை தயார்படுத்தி 

அழைத்து சென்றதும்..

இன்னும் சென்னை மண்டலத்தின் உதவிதலைவராக நீடிப்பதும்.... 

கற்பனை செய்ய முடியவில்லை. 

குடும்பம் முழுவதுமே ஏற்றுகொண்ட மா பெரும் தியாகமாகவே 

கருதுகிறேன்.

இயற்கை ஏன் தோழருக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் இத்தனை 

வஞ்சனை செய்ததோ. 

இத்தோடு அவர்களுக்கு ஆறுதலும் உற்சாகமும் தரட்டும். 

தோழருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் உணர்ச்சிபூர்வமான இயக்க 

வணக்கங்களும் வாழ்த்துக்களும்.......

-- 

திங்கள், 13 ஜூன், 2011


மரணம் தவம்....................?
            நீ ரசித்ததை கொண்டே ஆறுதல் சொல்கிறேன். பல தவங்களின் முடிவு மனதை ஊடுருவுகிறது. நானும் அனுபவித்துள்ளேன்.

மரணம்.......

எல்லோருக்கும் 
எழுதப்பட்ட சாசனம் !

உனக்கு மட்டும் 
இல்லையென்று 
எண்ணுவது நூதனம் !

மரணம் இரசி!
மரணித்தல் சுகம் !
சுகிக்காதவர்க்கு யுகம் !

மரணம் புசி!
வாழ்க்கை பந்தயம் 
வெறும் மரணம் நோக்கித்தான் 
என்பதுணர்!

மரணம் ஒரு தியானம் !
மரணம் ஒரு ஞானம் !

எல்லை மரணம் என்பதால் 
இலக்கை  காதலி !

உலக உருண்டை 
உண்மையில் மரணத்தின் 
திசையில் தானே 
உருள்கிறது!

நிர்மூலமாவது 
மெய்யென்றால் 
மெய்யை பொய்யாக்கு !

மறுமுறை 
உன் உடல் கதவை 
உயிர் தட்டும்போது 
மருத்துவரை அழைக்காதே 
மரணத்தை அழை ! 

உடல் வேலி
உறுதியாய் இருந்தாலும்
இயற்கை
உயிர் உடைத்து
அழுகச் செய்யும் !
இன்னும் இருப்பவர்களை
அழச் செய்யும் !


உடலைப்  புதுப்பிப்பதாய்
உள்ளோர் உளறிக் கொட்டினாலும் 
அஸ்தி தான் அஸ்தம் ! அறி !

உடல் சுகிக்காத 
உணர்வை 
உயிர் சுகிக்கட்டும் !

மரணி !
பிரபஞ்சம்
உனக்குள் அடங்கும் !
தம்பி முத்துகுமரா இதற்குள் அமைதி அடைந்திருப்பாய்... ஆனாலும் அவ்வப்போது வந்து போவதை தடுக்கமுடியாது.

AGITATION AGAINST BRANCH MANAGER JAGADEESAN OF AMBAI BO


அம்பை கிளை வளர்ச்சி அதிகாரிகளை காட்டுமிராண்டிதனமாக நிர்வாகம் செய்யும் முது நிலை (?) கிளை மேலாளர் ஜெகதீசனை கண்டித்து கிளை தோழர்கள் மற்றும் திருநெல்வேலி கோட்ட பொறுப்பாளர்கள் இணைந்து அம்பை கிளை முன்பு  மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெகதீசன் செய்த மாபெரும் சில்லறை தனங்களை ( நீச்சல் அடிக்க நீச்சல் குளமும் டென்னிஸ் ஆட மைதானமும் கேட்டது, முதல் நிலை அலுவலர்  மற்றும் புதிய வளர்ச்சி அலுவலரின் உடல் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் போக்கு) உட்பட) சுட்டிக்காட்டி கோசங்கள் எழுப்பப்பட்டது. நிர்வாகம் தன்னை அம்பை கிளைக்கு மாற்றல் செய்ததை கண்டித்தும் இதுபோல் நிர்வாகம் செய்தால் தான் சீக்கிரம் இட மாறுதல் கிடைக்கும் என்பதே அவர் தரப்பு வாதமாகும். இதில் இன்னும் செஇறப்பு இவர் வளர்ச்சி அதிகாரி நிலையிலிருந்து பணிமூப்படைன்தவர். பொதுசெயலாளர் தோழர் கார்த்திக் ராஜா சொல்லும் பன்றி கதை தான்  நினைவுக்கு வருகிறது.

வியாழன், 2 செப்டம்பர், 2010

உணவு கூப்பன் முறை.

                                 எல் ஐ சி யில் நடந்து வரும் சம்பள பேச்சு வார்த்தையில் முக்கியமான ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அது மதிய உணவு கூப்பன் முறை.
                                நிறுவன ஊழியர்கள் ஒன்றை கேட்டால், ஒரு வேளை அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நிவாகத்தின் உயர் மட்ட அதிகாரிகளுக்கும அதை தங்களுக்கு சாதகமாக உருவாக்கி கொள்வதும், ஊழியர்களுக்கு அதை பாதகமாக்கி விடுவதும் இயல்பே.
                              அந்த வகையில் இந்த கோரிக்கையானது பெரிய பட்டணங்களில் வேலை செய்பவர்களுக்கு மிக தேவையானதே. நகரின் அருகாமையில் வசிக்க முடியாத் சூழ்நிலையில் உணவு கொண்டு வருவது முடியாத காரியமே. அன்றாடம் சாப்பிட பணம் கிடைத்தால் நல்லது.

                               ஆனால் நடந்தது வேறு. sodexo  என்ற நிறுவனத்துக்கும் இந்தியாவின் பெரிய சில்லறை வணிகர்களுக்கும் பெருவாரியான பலன் போய் சேர்ந்ததை தவிர
                           ஆனால் ஊரகபகுதி தோழர்களுக்கு இது இன்னுமொரு நலதிட்டமே. ஆனால் இதில் நிர்வாகம் அடைந்து கொண்டது ஒன்று இதை சாக்காக வைத்து அவர்களும் பலன் அடைவது, அதிலும் மனிதர்களுக்கு வயிறு ஒன்றுதான் ஆனால் இதில் வகுப்பு வாரியாக தொகை நிர்ணயம். இன்னொன்று வருகைப்பதிவேடை கம்ப்யுடர் மயமாக்குவது. இதை இதுகாறும் தொழிற் சங்கத்தினர் தடுத்து வந்திருந்தனர். இது நல்ல திட்டமா இல்லையா என்பதை காலம் வழக்கம் போல சொல்லி கொடுக்கும்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

வள்ளியூர் கிளை சந்திப்பு.

வள்ளியூர் கிளைக்கு கோட்ட சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் சென்றிருந்தோம். அனைத்து உறுப்பினர் தோழர்களும் கலந்து கொண்டனர். அதிகமாக பேச நேரம் கிடைத்தது. மதிய உணவு வழங்கி உபசரித்தனர்.